ஏ.பி.வி.பி எதிர்ப்பு

மத்தியப் பிரதேசம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் மத்திய பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை ஜூலை 30, 31 தேதிகளில், அமெரிக்காவின் மாண்ட்க்ளேர் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படவிருந்த ‘அறிவியல் உறுதித்தன்மை, சாதனைகளில் கலாச்சாரம், மொழியியலால் ஏற்படும் தடைகள்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் இணையதள கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்தது. இதில் பேச அழைக்கப்பட்டவர்களில் கௌஹர் ரசா என்பவரும் ஒருவர். இவர், டெல்லி கலவரத்தில் சம்பந்தப்பட்டதாக் குற்றம் சாட்டப்பட்ட அபூர்வான்ந்த், பயங்கரவாதி அப்சல் குரு போன்றோரின் அனுதாபி. அப்சல் குருவிற்காக ‘அஜ்மல் பிரேம்’ என்ற கவிதையை எழுதி சமர்பித்துள்ளார். அவரை இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கக்கூடாது என மாணவர்கள் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பு கண்டனம் தெரிவித்தது. மேலும், பல்கலைக்கழக துனை வேந்தருக்கும் காவல்துறைக்கும் இது குறித்து கடிதம் எழுதியது. காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு மத மற்றும் ஜாதி உணர்வுகள் புண்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டு ஒரு கடிதம் எழுதினர். இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் அந்த கருத்தரங்கை நிறுத்திவிட்டது.