கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக, ‘பி.எம் கேர்ஸ்’ என்ற திட்டத்தை, பிரதமர் மோடி அறிவித்தார். பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இத்திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும், இலவச உறைவிடக் கல்வி, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘கடந்த ஏப்ரல் மே மாதங்களில் 645 குழந்தைகள் கொரோனா காரணமாக தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை, இணையதளத்தில் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பி.எம் கேர்ஸ் திட்டத்தில் உதவி பெற, கடந்த 29ம் தேதி வரை தமிழகத்தைச் சேர்ந்த 112 குழந்தைகள் உட்பட 292 குழந்தைகளின் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன’ என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் கூறினார்.