கவர்ச்சித் திட்டங்கள் உஷார்

ஒரு முட்டையின் விலை, 2 ரூபாய், 24 பைசா மட்டுமே என பத்திரிகையில் அதிரடி விளம்பரம் வெளியிட்டு மக்களை ஆச்சரியப்படுத்திய Rafoll Retails(opc) pvt. Ltd., Eggmart என்ற நிறுவனம் அதே சமயம் முட்டை விற்பனையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்தது. அந்த விலையில் தரவே முடியாது என மொத்த விற்பனையாளர்கள்கூட தெரிவித்தனர். அந்த நிறுவனம் இந்த திட்டம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, ஆஜரான அதன் நிறுவனர் சிவம் நரேந்திரன், முறையான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், எங்கள் நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தவில்லை. பணம் கட்டியவர்களுக்கு, அதே முறையில் திருப்பி அனுப்பி விடுகிறோம். எங்கள் நிறுவனத்தின் பெயரில் இயங்கும் ஆன்லைனை முடக்கி விடுகிறோம்’ என்றும் தெரிவித்தார். அதன்படி செய்தும் விட்டார். இதுபோன்று வெளியிடப்படும் போலி விளம்பரங்களை நம்பி, பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.