அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு

ஸ்டேன் சாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், திமுக எம்.எல்.ஏ செந்தில்குமாரின் மனைவியுமான மெர்ஸி செந்தில்குமார், பாதிரியார் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு குரல் கொடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு பாதிரியார் இறந்து விட்டார். அவருக்கு இப்போது குரல் கொடுக்கிறார்கள். நாளையும் எங்கோ ஓரிடத்தில், பாதிரியாரோ, சிஸ்டரோ போராடி கொண்டுதான் இருப்பார்கள். பாதிரியார்கள், சிஸ்டர்கள் வந்த பிறகே நமக்கு கல்வியும், பகுத்தறிவும் கிடைத்தது. உலகில் உள்ள பாதிரியார்களையும், சிஸ்டர்களையும், ஹூரோ, ஹூரோயின்களை போல பார்க்க வேண்டியது அவசியமானது. இந்த உலகில் எவனாக இருந்தாலும், பாதிரியாரையும், சிஸ்டரையும் கைது செய்ய வேண்டும் என்றால், வாடிகனில் உள்ள போப்பிடம் அனுமதி பெற வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்’ என பேசி உள்ளார். அவரது இந்த சர்ச்சை பேச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஸ்டேன்சாமி,  பீமா கோரேகான் வழக்கில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட பயங்கரவாத ஆதரவாளர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாதிரி ஜார்ஜ் பொன்னையா, ஹிந்து கடவுள்கள், பாரதத்தாய், பிரதமர் என அனைவரையும் கீழ்தரமாக பேசியவர், இவர்கள் இருக்கும் தி.மு.கவையே பிச்சைக்காரர்கள் என்றவர் என்பதை மறந்து தனது மதவெறியை மெர்சி செந்தில்குமார் வெளிப்படுத்தியுள்ளார். பிராங்கோ முலக்கல் போன்ற ஆயிரக்கணக்கான பாதிரிகளால் லுாசி கலப்புரா போன்ற லட்சக்கணக்கான கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள் குறித்தோ, அதனை கண்டுகொள்ளாத வாடிகன் குறித்தோ மெர்சி பேசுவாரா என நெட்டிசன்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.