டேனிஷ் சித்திக் கொலையின் பின்னணி

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில், பாரத புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு தலிபான்கள் வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. அவருக்காக நமது நாட்டில் பெரிய ஊர்வலங்கள், அஞ்சலிகள் எல்லாம் நடத்தப்பட்டன. ஆனால், தற்போது இவரது கொலை குறித்த அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டில் என்ற அமைப்பை சேர்ந்த மைக்கேல் ரூபின் என்பவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘தாலிபான்கள் அவரை மசூதி ஒன்றில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். அவர் பாரதத்தில் இருந்து வந்தவர்தான் என தெரிந்ததும் அவரது ஆவணங்களை சரிபார்த்து உறுதிபடுத்தினர். பின்னர் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கொடூரமாக தாக்கி தூக்கில் போட்டுள்ளனர். அதன் பிறகே துப்பாக்கியால் சுட்டுள்னர். அவரது தலையில் பலமாக தாக்கப்பட்டதன் அடையாளங்கள் உள்ளன. சித்திக்கை காக்க சென்ற ஆப்கன் ராணுவ வீரர்கள், தளபதியையும் சுட்டுக் கொன்றனர்’ என தெரிவித்துள்ளார்.

ஏதோ தவறுதலாகவே அவர் சுடப்பட்டு இறந்ததாக கூறிவரும் இங்குள்ள பத்திரிகையாளர்கள், நடுநிலைவாதிகள், அரசியல்வாதிகள் எல்லாம் தற்போது தலிபான்களின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள சூழலில், இது குறித்து வாய் திறப்பார்களா?