இடஒதுக்கீடு அமல்

அகில இந்திய மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1,500 இளங்கலை மருத்துவ படிப்பு  மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு சுமார் 2,500 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.