பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட பி.பி.எஸ் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஆப்கனில் தலிபான்களுடன் இணைந்து போராட 10 ஆயிரம் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் அனுப்பப்பட்டது குறித்த கேள்விக்கு, அவர்கள் சாதாரண பொதுமக்கள். அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்புகின்றனர். அவர்களை பாகிஸ்தான் தடுக்காது. ஆப்கானிஸ்தானில் ஆரம்பத்தில் ராணுவத் தீர்வைக் கான புறப்பட்ட அமெரிக்காதான் ஆப்கனில் குழப்பத்தை விளைவித்தது என கூறினார். மேலும், ஆப்கன் அரசிற்கு எதிரான போராட்டத்தில் தலிபான்களுக்கு ராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும், உளவுத்துறை உள்ளீடுகளுடனும் உதவி செய்வதாக பாகிஸ்தான் மீது நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இம்ரான்கான் உட்பட அனைத்து பாகிஸ்தான் தலைவர்களும் அதனை மறுத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.