சிறப்பாக செயல்படும் பாரதம்

‘கொரோனா பிரச்னையை பாரதம் மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது. தடுப்பூசி நோய் பரவலை தடுக்கிறது. அதனை அனைவருக்கும் செலுத்த வேண்டியது அவசியம். மக்கள்தொகை அதிகம் என்பதால் இந்த பணியில் சவால் உள்ளதை உணரமுடிகிறது. வினியோகம் அதிகரிக்க வேண்டும் அப்போதுதான் தடுப்பூசி அனைவரையும் சென்றடையும். நோய்த் தொற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் எனவே, எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய நேரம் இது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பலரிடம் இன்னமும் தயக்கம் உள்ளது. பள்ளி, கல்லுாரிகளை திறக்கும்போது குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட இது காரணமாக அமைந்துவிடும். தடுப்பூசி மீதான தயக்கத்தை போக்க, சமூக சிந்தனையுள்ள விஞ்ஞானிகள், சமூக தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன்’ என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறினார்.