வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, தேசிய மகளிர் ஆணையம் சார்பில் டிஜிட்டல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த 24 மணி நேர உதவி மையத்தைத் துவக்கியுள்ளது. பாதிப்பிற்கு உள்ளாகும் பெண்கள், 78271 70170 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவல்துறை, மருத்துவமனை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, உளவியல் சேவைகள் உள்ளிட்ட உதவிகளை பெறலாம்.