வங்க தேசத்தில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகள் மூவரை சட்டவிரோதமாக பாரதத்திற்கு அழைத்து வந்து டெல்லியில் தங்க வைப்பதற்காக அழைத்துச் சென்ற நூர் இஸ்லாம் உட்பட மூன்று பேரை உத்தரபிரதேச பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை விசாரித்ததில் அந்த மூவரையும் அழைத்து செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த ஒருவர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். நூர் இஸ்லாம் இதற்கு முன்பு திரிபுரா எல்லையில் பணிபுரிந்துகொண்டிருந்த வங்க தேசத்தவர் என்பதும் அவர் சட்டவிரோதமாக மக்களை கடத்தி, பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணியை செய்துவந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.