நானும் பிரதமர் ஆவேன்

நிழல் உலக தாதா, மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் பாகிஸ்தான் காதலியும் நடிகையுமான மெஹ்விஷ் ஹயாத் சமீபத்தில் ஜியோ டி.வி என்ற தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், இம்ரான்கான் ஆட்சியால் நான் ஈர்க்கப்பட்டேன். அவர் பாகிஸ்தானில் நல்ல மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். நானும் வருங்காலத்தில் பிரதமராக விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் சேர்ந்தோ அல்லது புதிய அரசியல் கட்சியை துவக்கியோ அரசியலில் வர விரும்புகிறேன். ஒரு கிரிக்கெட் வீரர் நாட்டின் பிரதமராக வரமுடியும் என்றால், நடிகர்களும் நிச்சயமாக பிரதமராக முடியும் என கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பாகிஸ்தானின் திரையுலகம், அரசியல் என அனைத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.