பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுபவர் சௌத்ரி முஹம்மது இஸ்மாயில் குஜ்ஜார். இவர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பி.எம்.எல்-என் கட்சியின் அப்பகுதியின் தலைவர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றுது வரும் மாகாண தேர்தல்களில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை தாக்குகின்றனர். மோசடிகள் செய்கின்றனர். ஜெயிக்க பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். தங்களது கட்சி அலுவலகங்களை தாக்குகின்றனர் என தெரிவித்தார். மேலும், தேர்தல் நடத்துவதில் அரசு நிர்வாகம் ஒத்துழைக்காவிட்டால் இந்த விஷயத்தில் பாரதத்தின் உதவியை நாடுவேன் எனவும் தெரிவித்தார்.