ரோஹிங்கியாக்களிடம் இருந்து நிலம் மீட்பு

டெல்லியில் உள்ள மதான்பூர் காதர் பகுதியில் ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களால் உத்தர பிரதேச அரசின் நீர்வள அமைச்சகத்திற்கு சொந்தமான 2.1 ஹெக்டேர் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ. 150 கோடி. இதனை டெல்லி அரசிடம் முறையாகத் தெரிவித்து அவர்கள் ஒப்புதலுடனும் டெல்லி காவல்துறை உதவியுடன்னும் உத்தர பிரதேச அரசு அதிரடியாக மீட்டுள்ளது. அங்கிருந்த சட்டவிரோத கட்டுமானங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. முன்னதாக இதே போன்று பாரதத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள், டெல்லி சரிதா விஹார் பகுதியில் ஆக்கிரமித்திருந்த  சுமார் 6 ஹெக்டேர் நிலம் உ.பி அரசால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.