காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த திங்களன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு ஒரு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
இதனையடுத்து ‘டெல்லியின் சாலைகளில் விவசாய டிராக்டரை ஓட்டுவதற்கான உரிமம் உள்ளதா, அப்படி இருந்தாலும் டிராக்டரை ஓட்ட ராகுல் உரிமம் பெற்றுள்ளாரா, அவர் சாலை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளாரா என காவல்துறை விசாரித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். எரிபொருள் விலை உயர்ந்துவிட்டதாக கூறும் ராகுல், எரிபொருள் விலையை பொருட்படுத்தாமல் எதற்காக கஸ்லர் டிராக்டரை ஓட்டி வந்தார்’ என இணையத் தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, நேற்று கார்கில் வெற்றி தினத்தை தேசமே கொண்டாடியது. அதில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதையும், உயிரோடு இருப்பவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அன்றைய தினத்தில் தனது கீழ்தரமான அரசியல் நடவடிக்கைகளை ராகுல் முன்னெடுத்து நமது வீரர்களை அவமதித்துள்ளார் என்பதையே அவரது செய்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 2004 முதல் 2009 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கார்கில் வெற்றித் திருநாள் கொண்டாட்டங்களை நடத்தியதே இல்லை என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.