கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18ம் தேதி கிறிஸ்தவ இஸ்லாமிய கூட்டமைப்புகளின் சார்பில் உரிமை மீட்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பாதிரி ஜார்ஜ் பொன்னையா, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பாரத மாதா, பூமித்தாய், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாஅகர்கோயில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும், “உங்கள் திறமையால் நீங்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து போட்ட பிச்சையால்தான் வெற்றி பெற்றீர்கள்” என்று தி.மு.கவை தோலுரித்தார்.
இதையடுத்து தேசம் முழுவதும் பாதிரியின் பேச்சுக்கு கண்டனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து தப்பிச்சென்ற பாதிரி ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவரின் பேச்சுக்கு தி.மு.க தலைவர்கள் எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. காங்கிரசோ, ‘யாராக இருந்தாலும் கண்டிக்கிறோம்’ என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது. ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மூச்சு கூட விடவில்லை. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், பாதிரியின் கைதை கண்டித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு, தனது டுவிட்டர் பதிவில், பதிவில், பாதிரியை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று உருகியிருக்கிறார்.
தி.மு.கவினர், அவர்களது கூட்டணி கட்சியினரின் சிறுபான்மையினர் மீதான பாசம், ஹிந்துக்கள் மீதான வெறுப்பை காட்டும் விதமாகவே அவர்களின் இந்த நடவடிக்கைகள் உள்ளன என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.