பயங்கரவாதி மிரட்டல்

மமதா ஆட்சியின் கீழ் மேற்கு வங்கம் முஸ்லிம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறது. குடிசைத் தொழிலைபோல வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அண்மையில் கொல்கத்தாவில் நியோ ஜமாஅத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜே.எம்.பி) அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வகையில், சமீபத்தில் வடக்கு தினாஜ்பூர் பிரஸ் கிளப் அலுவலகம் முன்பாக ஒரு சி.டி கண்டெடுக்கப்பட்டது. அதில், ‘இந்த செய்தி அனைத்து சேனல்களிலும் காட்டப்பட வேண்டும், இல்லையெனில் அவர்கள் மோசமான விளைவுகளை சந்திப்பார்கள்’ என கூறிய ஒரு முகமூடி அணிந்த நபர், தன்னை ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தௌசிப் அலி என அடையாளப்படுத்திக் கொண்டான். மேலும், ‘மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்யும் மாநில வேலைவாய்ப்பு தேர்வில் தனது உறவினர்களில் 7 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதாவது ஆனால், இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 13,000 பேரையும் கொல்வோம், தேர்வை நடத்திய அதிகாரிகளையும் கொல்வோம். மமதா பேனர்ஜி தன் தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.’ என மிரட்டியுள்ளான். காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.