சமூக ஊடக மசோதா அறிமுகம்

சமூக ஊடக நிறுவனங்களான முகநூல், டுட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தாங்கள் இடைநிலையாளர்கள் என கூறித் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பித்து வருகின்றன. அதனைத் தடுக்க வேண்டும் என உலகம்  முழுவதிலும் குரல்கள் எழுகின்றன. பாரத அரசுகூட சமீபத்தில் இதற்காக புதிய சட்டம் இயற்றியது. இந்நிலையில், அமெரிக்க செனட்டர் ஆமி குளோபுச்சார், சமீபத்தில் இதனை தடுக்கும் விதமாகவும் சமூக ஊடகங்கள் தங்கள் பயனர்கள் பதிவுகளுக்கு பொறுப்பேற்கும் விதமாகவும் ஒரு சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர், ‘சமூக ஊடக நிறுவனங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள வழக்குகளுக்கு எதிராக பாதுகாப்பை அனுபவிக்கின்றன. ஆனால்அவற்றின் பொறுப்பை சரிசெய்ய வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது.  அதனால், இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி அவர்கள் அனுபவித்து வரும் அபரிமிதமான சுதந்திரத்துக்கு கடிவாளமிடுவது அவசியம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.