பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக செயல்படும் லாப நோக்கற்ற சட்ட செயல்பாட்டு அமைப்பான எஸ்.சி – எஸ்.டி உரிமைகள் மன்றம், ஆந்திராவில் பெரிய அளவிலான மத மாற்றங்கள் தொர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான இந்த மாற்றங்கள் சமூக மோதல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ‘எஸ்.சி’ என்ற சொல்லும் ‘கிறிஸ்தவர்கள்’ என்ற சொல்லும் அம்மாநிலத்தில் ஒத்ததாகிவிட்டது என்பதுதான் இன்றைய எதார்த்த நிலை. இது பட்டியல் சாதி சமூகங்களின் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். கிறிஸ்தவ மிஷனரிகளின் படையெடுப்பிலிருந்து பட்டியலின சமூகங்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த அரசு கண்களை மூடிக்கொண்டுள்ளது’ என தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து, ஆந்திராவின் தலைமைச் செயலாளருக்கு இதனை குறித்து விசாரித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையம் (என்.சி.எஸ்.சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.