பி.எப் கணக்கில் உள்ள விவரங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களின் பி.எப் தொடர்பான விவரங்களை 044 – 24325050 என்ற எண்ணில் 24 மணி நேரமும் ஐ.வி.ஆர்.எஸ் (Interactive Voice Response System) சேவை மூலமாக அறிந்து கொள்ளலாம் என்று மாநில கணக்காளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வசதி ஜூலை 14ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் பொது நல நிதி, வருங்கால வைப்பு நிதி நடப்பு மற்றும் இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை, கணக்கில் உள்ள இறுதி தொகை போன்ற அனைத்து தகவல்களும் வழங்கப்படும் என்று மாநில கணக்காளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.