வானத்தில் வரும் எதிரியின் ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் வானூர்திகளை சூப்பர்சோனிக் வேகத்தில் சென்று தாக்கியழிக்கக் கூடியவை எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ரக ஏவுகணைகள். நடுத்தர ரக வான் பாதுகாப்பு ஏவுகணையான இதனை நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ உடன் இஸ்ரேலின் ஐ.ஏ.ஐ இணைந்து மேம்படுத்தியுள்ளது. 70 கி.மீ தூரம்வரை வரும் இலக்குகளை இந்த ஏவுகணை அமைப்பு சுட்டு வீழ்த்தக்கூடியது. ராணுவம்,கடற்படை, விமானப்படை என முப்படைகளும் இந்த அமைப்பை சில மாற்றங்களுடன் படையில் இணைத்து செயல்படுத்தலாம். பாரத விமானப்படைக்காக தயாரிக்கப்பட்ட இந்த வான்பாதுகாப்பு இந்த ஏவுகணைகளின் முதல் தொகுதி பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து விமானப்படையிடம் ஒப்படைக்க கொண்டு செல்லப்பட்டது.