பாதிரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

சமீபத்தில்  கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இணைந்து சட்டவிரோத ஜெபக்கூட்டத்தை அனுமதிக்கக் கோரிய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாதிரி ஒருவர், பாரத மாதாவை இழிவாக பேசியுள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சபித்துள்ளார். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் காந்தியை ஒருமையில் தரக்குறைவாக பேசியதுடன் சமூகப் பதற்றம், மத மோதலை உருவாக்கும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், பொது மேடையில் கீழ்தரமான, தவறான வார்த்தை பிரயோகங்களும் பல இடங்களில் செய்துள்ளார். குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ளதை ஒப்புக்கொண்ட அவர், தி.மு.க வென்றது நாங்கள் போட்ட பிச்சை என கூறியதுடன் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். எனவே, அவர் மீது மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தி மைனாரிட்டி அந்தஸ்து யாருக்கு அளிப்பது என்பதை பரிசீலிக்க வேண்டும். சர்ச் நிர்வாகமும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குமரி மாவட்ட மக்களும் நெட்டிசன்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.