வேலூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து தடுத்தது தமிழக காவல்துறை. அது குறித்து கேட்டபோது, பக்ரீத் என்பதால் அனுமதி இல்லை என கூறினர். முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத்துக்கும் ஹிந்துக்கள் வணங்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் முடிச்சுப்போட்டு தேவையற்ற பதற்றத்தை தமிழக காவல்துறை உருவாக்கியது. இதனை அறிந்த வேலூர் இந்து முன்னணி பொறுப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகளிடம் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன் பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில வருடங்களாகவே டிசம்பர் 6, அனைத்து முஸ்லிம் விழாக்களின் போதும் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து தேவையற்ற பதற்றத்தை மாநில அரசே உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.