முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு வாரண்ட்

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித்தின் மனைவியான லூயிஸ் குர்ஷித், ‘டாக்டர் ஜாகிர் உசேன் மெமோரியல் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பாக ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள் கொடுப்பதாக்க் கூறி, மத்திய அரசின் மானியமாக ரூ. 71 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை முறைகேடாக பெற்றார். கூறியபடி எந்த முகாமையும் அவர் நடத்தவில்லை. மேலும், இதற்காக உத்தரபிரதேச அரசின் சில மூத்த அதிகாரிகளின் கையொப்பங்களையும் முத்திரைகளையும் மோசடியாக இதற்கு பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டது. இதனை குர்ஷித் தம்பதிகள் மறுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட்து. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், லூயிஸ் குர்ஷித், அறக்கட்டளை செயலாளர் அதர் பாரூக்கி ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.