நாட்டையும் வீட்டையுக் காக்கும் விளக்கு பூஜை

ஒரு பெண்மணி தினமும் தன் வீட்டருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்கிறாள். அவள் அம்மனை தரிசித்து முடித்தவுடன் அங்குள்ள அர்ச்சகர் அந்த பெண்மணியைப் பார்த்து இந்த வெள்ளிக்கிழமை இங்கு விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. அதற்கு நீங்களும் உங்கள் வீட்டருகே இருக்கும் பெண்மணிகளையும் அழைத்து வாருங்கள் என்று கூறுகிறார். இந்த பூஜையின் பலனை பற்றி சிறிது கூறுங்கள். அதை கூறி அந்த பெண்மணிகளை அழைத்து வருகிறேன்” என்று கூறுகிறாள். அப்பொழுது அந்த அர்ச்சகர், குத்துவிளக்கை அம்பாளாக பாவனைசெது அதற்கு அர்ச்சனை செவதே விளக்குப் பூஜை. இப்பூஜையில் அர்ச்சனை செயப்படும் குங்குமம் மிகவும் சக்தி வாந்தது. அந்த குங்குமத்தின் மகிமையை இப்போது கேளுங்கள்.  லலிதா ஸஹஸ்ரநாமத்தின்  முகச்சந்த்ரகலங்காப்ப்ருகந்னாபவிசேஷிதா” – சந்திரனிடம் தோன்றும் களங்கம் போன்று முகமண்டலத்தில் விளங்கும் கஸ்தூரிப்பொட்டு, ஸிந்தூரதிலகாஞ்சிதா” – ஸிந்தூரத்திலகத்தால் அலங்கரிக்கப்பட்டவள், ஆகிய இரண்டு நாமக்களைக் விளக்கிக் கூறுகிறார்.

 

அம்பாளுக்கு அர்ச்சனை செத குங்குமத்தைப் பெண்கள் நெற்றி வகிட்டில் வைத்துக்கொண்டால் உடலில் நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அந்த குங்குமமானது பிரம்மா எழுதிய நம்முடைய தலையெழுத்தையும் திருத்தக்கூடிய சக்திவாந்தது. துர்தேவதைகளை கெட்ட சக்திகளை அண்டவிடாது.  ஸௌந்தர்யலஹரியிலும் ஆதிசங்கரபகவத்பாதாள் இதனுடைய சிறப்பைப் பற்றிக் கூறுகிறார்.

தனோது கே்ஷமம் நஸ்தவ வதன ஸௌந்தர்யலஹரி என்று துவங்கும் ஸ்லோகத்தில், அம்பிகையின் முகமோ அழகு வெள்ளமே

கரைபுரண்டு வந்ததுபோல் இருக்கின்றது. அந்த அழகு வெள்ளப்பெருக்கின் மத்தியில் வழிந்தோடும் வாக்கால் போலிருக்கின்றது அம்பிகையின் கூந்தலின் நடுவில் பிரிக்கப்பட்டிருக்கும் வகிடு! அதில் வைக்கப்பட்டிருக்கும் குங்குமமோ இரு பக்கமும் திரண்டிருக்கும் கேசத்தின் மத்தியில் சிறைப்பிடிக்கபட்டதுபோல் காணப்படுகிறது. அது இருளாகிய எதிரியின் கூட்டத்தைச் சிறைப்பிடித்ததுபோல இருக்கின்றது. அதில் இடம் பெற்றிருக்கும் சிவப்பு வண்ணக் குங்குமமோ சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் இளம் கதிரவனைப் போல் பிரகாசிக்கின்றதாம். இந்த ஸ்லோகத்தை  தியானம் செதால் ஏற்கெனவே நாம் அடைந்துள்ள சௌபாக்யத்தைப் போல் பன்மடங்கு மங்களங்கள் பெருகுமாம். பெண்களின் கூந்தலின் நடுவில் உள்ள வகிட்டை, ஆன்றோர்கள் சீமந்தம் என்று அழைப்பார்கள். உத்தம சுமங்கலிகள் அவ்வகிட்டில் சௌபாக்கியத்தின் அறிகுறியாக குங்குமம் என்கிற சிந்தூரத்தை இட்டு மேலும் அழகு பெறச்செவர்.

இப்படிக்கூறிய அர்ச்சகர், சனாதன ஹிந்து தர்மத்தில் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதம் ஆடிமாதம்  என்பது நாமறிந்ததே. ஆடி வெள்ளியில் செயும் விளக்கு பூஜை வீட்டையும் நாட்டையும் சுபிட்சமாக்கும் என்று அதன் சிறப்பை விளக்கினார்.

(கட்டுரையாளர் இசை, ஹிந்தி, ஸம்ஸ்க்ருத்தில் முதுகலைப்பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.)