கே.ஆர். நாராயணனுக்கு கிறிஸ்தவ கல்லறையா?

மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், தலித் என்ற போர்வையில் வாழ்ந்தவரா என்ற புது சர்ச்சை ஒன்று இப்போது கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சையை கிளப்பியிருப்பது ஆங்கிலத்தில் வெளிவரும் ‘அவுட்லுக்’ பத்திரிகை. அதன் நிருபர் தற்செயலாக தில்லியில் கிறிஸ்தவர்களுக்கு என பிரத்யேகமாக உள்ள கல்லறை தோட்டத்திற்குச் சென்ற போது அங்கு முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாரயணனுக்கும் கல்லறை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார், உடனே அரசு இலச்சினையுடன் கல்லறை மூடியின் மீதிருந்த வாசகத்தை புகைப்படம் எடுத்து ஹிந்து முறைப்படி, அரசு யமுனா நதிக்கரையில் தகனம் செயப்பட்ட கே.ஆர்.நாராயணனுக்கு கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் எப்படி கல்லறை வந்தது என்று கட்டுரை எழுதி பரபரப்பை உருவாக்கிவிட்டார்.

இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி என்று சோல்லப்பட்ட கோச்சேரில் ராமன் நாராயணன் எனும் கே.ஆர்.நாராயணன் தனது 85வது வயதில் மரணமடைய, அவரது பூத உடல் அரசு மரியாதயோடு யமுனா நதிக்கரையில், நேருவின் சமாதி இருக்கும் சாந்தி வனத்திற்கும் லால்பகதூரின் சமாதி இருக்கும் விஜகாட்டிற்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில் அடக்கம் செயப்படுகிறது. கே.ஆர்.நாராயணனுக்கு இரு புதல்விகள் ஒருவர் சித்ரா நாராயணன். இவர் இந்திய அரசு தூதுவராக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தவர். மற்றொருவர் அமிர்தா. எனவே இவருக்கான இறுதிச் சடங்குகளை இவரது மருமகன் டாக்டர் இராமச்சந்திரன் என்பவர்தான் செதிருக்கிறார். இவ்வளவும் நடந்த பிறகு, கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் அவருக்கு கல்லறை வந்தது எப்படி என்பதே அவுட் லுக் எழுப்பிய கேள்வி.

கேள்விக்கான பதில் இப்படித்தான் வருகிறது:

கே.ஆர். நாராயணன் இந்திய அயல் உறவுத்துறை அதிகாரியாக ரங்கூனில் பணியாற்றிய போது அவருக்கும் ப்ராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதவிரிவாக்க ஆர்வலரான பெண்மணி டிண்ட் டிண்ட் என்பவருக்கும் காதல் மலர, அரசு அனுமதி பெற்று அவரை திருமணம் செது இந்தியா அழைத்து வந்து விடுகிறார். டிண்ட் டிண்ட் என்ற அந்த அம்மணி தன்பெயரை உஷா என மாற்றிக் கொள்கிறார். எனவே உஷா நாராயணனாக வெளி உலகுக்கு அறியப்படுகிறார். ஆனால் கே ஆர் நாராயணன் 1997ல் ஜனதிபதியான பிறகு ராஷ்ட்ரபதி பவனுக்கு அருகில் உள்ள வைஸ்ரா சர்ச்சுக்கு தொடர்ந்து ஜெபம் செயச் சென்று வருகிறார்.

கே.ஆர். நாராயணன் தனக்கு கல்லறை வேண்டும் என விரும்பினாரா தெரியவில்லை, ஆனால் உஷா தான் மரணிக்கும் போது தனது கணவருக்கான கல்லறை ஒன்று தன் அருகிலே இருக்க வேண்டும் என்று கோரி இருந்ததால் நாராயணின் அஸ்தி சிறிது சேமித்து வைக்கப்பட்டு, உஷாவின் மரணத்திற்குப் பிறகு அவர் கல்லறை அருகில் அந்த அஸ்திக்கும் கல்லறை வைக்கப்பட்டதாம். இதை தில்லி கல்லறை கமிட்டி தலைவர் பாஸ்டர் ஜெ. ரெபெல்ல்லோ ஒப்புக் கொள்கிறார், பாஸ்டரிடம் உஷா தனது விருப்பத்தை தெரிவித்திருந்ததால், நாராயணன் பெயரை மாற்றாமல் கிறிஸ்தவராக வாழ்ந்தவர் என உஷாவின் பாஸ்டரும் நம்பியதால் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உள்ள கல்லறையில் அவரது அஸ்திக்கு கல்லறை வைக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாராயணின் மூத்த புதல்வி சித்ராதான் இதற்கான அரசு அங்கீகார்த்தை பெற்ற பின் நடந்துள்ளது. இதை ஒப்புக்கொள்ளும் சித்ரா, தனது தந்தை ஒரு ஹிந்துவாகத் தான் வாழ்ந்தார், தனது தாயாரின் அவாவை பூர்த்தி செயவே மறுபுதையல் செயப்பட்டது  தயவு செது இதை பிரச்சினை ஆக்காதீர்கள் என்கிறார்.

சித்ராவின் கூற்றில் உண்மை இருக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும் நம்மால் சில கேள்விகளை முன் வைக்காமல் இருக்க முடியவில்லை.

* கே.ஆர். நாராயணன் ஹிந்துவாகத் தான் வாழ்ந்தார் என எப்படிச் சோல்கிறார் ?

* ஜனாதிபதி பதவியில் இருந்து விடுபட்ட பின் அவர் மதம்மாறாதிருந்தாரா ?

* உஷா, வைஸ்ரா சர்சுக்கு தொடர்ந்து சென்று வருபவர் என்பது உண்மையாக இருக்கும் போது ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக மற்றவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டி இருக்க மாட்டார் என்று எப்படிச் சோல்ல முடியும் ?

* சித்ராவும் அமிர்தாவும் ஹிந்துப் பெயரில் இருக்கும் கிறிஸ்தவர்களா? தலித்களுக்காக அரசு வழங்கும் சலுகையை பெற்று வருகிறார்களா?

* கிறிப்டோ கிறிஸ்தவர் (Crypto Christian ) என்ற ஓர் வார்த்தை உண்டு. பெயரில் ஹிந்து இருக்கும். ஆனால் கிறிஸ்தவார வாழ்க்கை நடத்துவர். கிறிஸ்தவ பிரச்சாரமும் செவர். (தமிழக உதாரணங்கள் – உமா சங்கர், கிறிஸ்துதாஸ் காந்தி, தேவசாகயம், சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் – இவர்களில் யார் யார் கிறிஸ்தவர் யார் யார் கிறிப்டோ கிறிஸ்தவர் என ஓர் ஆவு அவசியம். அனேகமாக இவர்கள் அனைவருமே ஹிந்து தலித் என்று அரசு சலுகை பெற்றவர்கள் தானோ!) கே ஆர் நாராயனனும் இந்த வகைதானா ?

* கே.ஆர். நாராயணன் ஒரு கிறிப்டோ கிறிஸ்தவர் என்றால் இந்த நாடு எந்த அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளது?

* ஜனாதிபதியாக இருந்து கொண்டு, நீதித்துறையில் நீதிபதி பதிவிகளுக்கு தலித்களுக்கு இட ஒதுக்கீடு எனக் குரல் கொடுத்ததன் பின்னணி, கிறிஸ்தவ தலித்களுக்கு என்று தான் எடுத்துக் கொள்ளங்ப்பட வேண்டுமா ?

நேருவின் மதசார்பற்ற காங்கிரஸ் இந்த நாட்டிற்கும் இதன் இறையாண்மைக்கும் எதிரான புற்று நோ கிருமிகளைத் தான் உருவாக்கி வந்தது, உருவாக்கி உலவ விட்டது என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. ஹிந்துக்களின் முதுகில் குத்துவதையே கொள்கையாகக் கொண்ட காங்கிரஸ் பிடியிலிருந்து தேசம் முற்றிலும் விடுபட்டே ஆக வேண்டும்.