ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அசாமில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ் காலாக்ஷேத்திரா என்ற அரங்கில் பேராசிரியர் நானி கோபால் மகாந்தா எழுதிய ‘Citizenship Debate over NRC & CAA: Assam and the Politics of History’ (என்.ஆர்.சி & சி.ஏ.ஏ குறித்த குடியுரிமை விவாதம்: அசாம் மற்றும் வரலாற்றின் அரசியல்) என்ற நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் குவாஹாத்தி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜே. ஹண்டிக் ஆகியோர் கலந்து கொண்டனர். சேஜ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள இந்த புத்தகம், நானி கோபால் மகாந்தாவின் கடந்த ஏழு ஆண்டுகளின் ஆராய்ச்சி பணிகளின் விளைவு. பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மிகப்பெரிய அவண காப்பக ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.