ரஷ்யாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ‘சிர்கான்’ என்கிற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷியா தயாரித்துள்ளது. சுமார் 1,000 கி.மீ. வரை பயணித்து இலக்கை அழிக்க கூடிய இந்த ஏவுகணையை, ரஷ்ய ஆர்க்டிக்கில் உள்ள வெள்ளைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து ஏவி  ரஷ்யா வெற்றிகரமாக சோதித்தது. இந்த சிர்கான் ஏவுகணை, 350 கி.மீ. வரை சென்று அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் பிறந்தநாளின் போது சிர்கான் ஏவுகணை முதல்முறையாக சோதிக்கப்பட்டது. அப்போது அவர் “சிர்கானின் சோதனை வெற்றி, எங்கள் ராணுவப் படைகளுக்கு மட்டுமல்ல, ரஷியா முழுவதற்கும் ஒரு பெரிய நிகழ்வு” என கூறினார்.