பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்புக் குழு (ஏப்.ஏ.டி.எப்), பாகிஸ்தானை தொடர்ந்து ‘கிரே’ பட்டியலில் வைத்துள்ளதற்கும் தொடர் கண்காணிப்பில் இருப்பதற்கும் பாரதத்தின் ராஜதந்திர நடவடிக்கையும் தொடர் அழுத்தமுமே காரணம். இதன் காரணமாகவே, பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது ஒரு சில நடவடிக்கைகளையாவது எடுத்து வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அண்மையில்கூட பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி நிறுத்தம் தொடர்பாக தாங்கள் எடுத்த நடவடிக்கைகளை ‘ஆறு பணிகள்’ என்று ஒரு புதிய பட்டியலை ஏப்.ஏ.டி.எப் அமைப்பிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது.