இயற்கையை காக்கும் ஜல்சக்தி

கங்கையில் உள்ள பல மீன் இனங்களில், ஹில்சா என்ற ஒருவகை மீன்கள் மட்டுமே குறிப்பிட்ட சீசன்களில் இனப்பெருக்கத்திற்காக எதிர்நீச்சல் அடித்து தான் பிறந்த இடத்திற்கு செல்லும். இவை அதிருஷ்டத்தைத் தரும் மீன்களாகக் கருதப்பட்டன. கங்கையில் அமைக்கப்பட்ட சில அணைகள் மூலமாக அதன் மேல் நோக்கிய இடப்பெயர்வு தடைப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மீன்களை உ.பி, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்டப் பகுதி மக்கள் பார்த்ததே இல்லை. ஆனால், தற்போது ஜல்சக்தி அமைச்சகம் கங்கைப் படுகைக்கு அனுமதித்துள்ள புதிய 344 திட்டங்களில் ஒன்றாக மாற்றியமைக்கப்பட்ட ‘பிஷ் பாஸ் கேட்’ என்ற தொழில்நுட்பம் வாயிலாக தற்போது, இவ்வகை மீன்கள், தங்களின் மேல் நோக்கிய இடப்பெயர்வை மீண்டும் ஆரம்பித்துள்ளன. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வகை மீன்களை தற்போது பார்க்கமுடிகிறது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.