இஸ்ரோவின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணனும் அவரது சகாக்களும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை தாமதித்தனர், உளவு பார்த்தனர் என காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு நடந்த சி.பி.ஐ விசாரணையில் அவர் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கப்பட்டது. அது குறித்த, ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மரியம் ரஷீதா, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை உருவாக்கும் அணியில் நம்பி நாராயணன் சேர்க்கப்படவில்லை என்பதைக் காட்டும் ஆவணங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த ஆவணத்தில், முஹம்மது முஸ்லிம் என்பவரை அந்த குழுவில் சேர்க்க ஏதுவாக அணிக்குத் தலைமை தாங்கிய விஞ்ஞானிகளான ஆர். கருணாநிதி மற்றும் கே. லட்சுமி நாராயணா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.