திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், நடமாட முடியாமல் படுக்கையில் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் சென்று நேரடி சிகிச்சை அளிக்கும் திட்டம் திருவள்ளூரில் துவக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, மீஞ்சூர், கடம்பத்துார், பூவிருந்தவல்லி, எல்லாபுரம், பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் தலா ஒரு வாகனம் என ஐந்து வாகனங்கள் விடப்பட்டுள்ளன. ஒரு வாகனத்தில், ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் இருப்பர். இச்சிகிச்சை பெற 1800 599 7626 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது 98403 27626 என்ற அலைபேசி எண்ணுக்கு ஒரு வாட்ஸ் ஆப் தகவல் அனுப்பினால் போதும். மருத்துவர்கள் வீட்டிற்கேவந்து சிகிச்சை அளிப்பார்கள்.