இறை வழிபாட்டுக்காக முழு கவனத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சௌதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது பாரம்பரிய பழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரனமாக இந்த பழக்க வழக்கத்தை மாற்றியுள்ளது சௌதி அரசு. தொழுகை நேரங்களில் கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குததற்காக கடைகள் முன்பு நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தொழுகை நேரங்களில் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக சௌதி இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்துள்ளார். இது சௌதி அரேபியாவில் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் என அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.