சீனாவில் கொரோனாவுக்கு அடுத்து?

சீனாவில் மகாக்ஸ் வகை குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்த கால்நடை மருத்துவர் ஒருவருக்கு சில மாதங்களுக்கு பின் வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு மரணமடைந்தார். இவரது உடலில் ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி மருத்துவர் ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932ல் கண்டறியப்பட்டது. இது நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும். இவ்வகை வைரசால் இறப்பு 70 முதல் 80 சதவீத உயிரிழப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீன நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.