தாய்மொழியில் தொழிற்கல்வி

‘புதிய கல்விக் கொள்கை- இந்திய மொழிகளின் ஆய்வு’ என்ற தலைப்பில் கர்நாடக பல்கலைக்கழகத்தின் அனைத்து மொழி ஆசிரியர்கள் சங்கம், ஒரு இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. அதில், கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வதா நாராயணா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி) அமல்படுத்தப்பட்ட பின்னர் பிராந்திய மொழி (தாய்மொழி) மேலும் பலப்படுத்தப்படும். இந்த விஷயத்தில் எந்த அச்சமும் இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கை, பிராந்திய மொழிகளில் தொழில்முறை கல்வி வழங்குவதை வலியுறுத்துகிறது. அதற்கான நடவடிக்கைகளை அரசு ஊக்குவிக்கும். பிராந்திய மொழி, தொழில்நுட்பம் மற்றும் புதுமை, முன்னேற்றம் ஆகியவற்றுடன் இணைந்து அதற்கேற்ப செழித்து வளர வேண்டும்.  அது அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும். வெளிநாட்டு மொழிகள் நம் தாய்மொழி மீது தாக்கம் ஏற்படுத்த தேசிய கல்விக் கொள்கை அனுமதிக்காது. படிப்புகள், பாடத்திட்டங்கள் நம் வல்லுனர்களால் வடிவமைக்கப்படும்’ என கருத்து தெரிவித்தார்.