வெற்றி வேல் வீர வேல்

சர்ச்சைக்குரிய தீவிர இடதுசாரி தன்னார்வ தொண்டு நிறுவனமான National Confederation of Human Rights Organizations (என்.சி.ஹெச்.ஆர்.ஓ), சமீபத்தில், பாரத ராணுவம், கோவை, மதுக்கரையில் உள்ள தனது படைப்பிரிவு தலைமையகத்தின் வாசலில், தனது போர் முழக்கமான ‘வெற்றி வேல் வீர வேல்’ என எழுதியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அலுவலர், “இந்த முழக்கம் பல ஆண்டுகளாக மதுக்கரை ராணுவப் படைப்பிரிவில் உள்ளது. ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு படைப்பிரிவிலும் இதுபோன்ற தனித்துவமான போர் முழக்கங்கள் உள்ளன. ‘வெற்றி வேல், வீர வேல்’ என்பது மதுக்கரை ரெஜிமென்ட்டால் பயன்படுத்தப்படுகிறது. இதில் வேறு எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார். எவ்வாறாயினும், எல்கர்-பரிஷத் பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டான் சுவாமி போன்ற நக்சல் அனுதாபிகளை புகழும் இதுபோன்ற தெளிவற்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், பாரத ராணுவத்தை அதன் சிறுமையான அரசியல் முயற்சிக்கு இழுக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.