கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநகராட்சியினர் ஹிந்து கோயில்களை மட்டும் குறிவைத்து இடிப்பதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து கோவை, டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும், அங்கு வந்து குவிந்த இந்து முன்னணியினர், மசூதிகளை இடிக்காமல் ஹிந்து கோயில்களை மட்டும் மாநகராட்சி குறிவைத்து இடிப்பதாக குற்றம் சாட்டினர். இந்து முன்னணியனரை எதிர்த்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் திரண்டால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த, பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.