சீனாவின் ‘லியு ஜுன் தாவோ லூ’ என்ற ராணுவ சேனலில் பதிவேற்ப்பட்ட வீடியோ ஒன்றில், ‘ஜப்பான் தைவானை ஆதரிக்கக்கூடாது. ஒருவேளை ஜப்பான் தைவானுக்கு ஆதரவாக ஒரேஒரு சிப்பாயை களம் இறக்கினாலும், சீனா ஜப்பான் மீது முழு அளவிலான போரை துவங்கும், அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும். அத்தாக்குதல், ஜப்பான் சரணடையும்வரை நீடிக்கும். டையோயு தீவுகள், ரியுக்யு தீவுகளை மீண்டும் கைப்பற்றுவோம். நாங்கள் அவற்றை நிர்வகிப்போம்’ என கூறப்பட்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து அந்த சேனல் அவசராவசரமாக அந்த வீடியோவை நீக்கியது.