உத்தரப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன், பயங்கரவாத தடுப்புப் படையினர் நடத்திய சோதனையில், அல் குவைதா பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உ.பியில் சில இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அம்மாநில காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். லக்னோ வாசிர்கஞ்ச் பகுதியை சேர்ந்த, ஷகீல், கேம்ப்வெல் சாலையை சேர்ந்த, முகமது மொய்தீன், முசாபர் நகரை சேர்ந்த, முகமது முஸ்திகீம் ஆகிய, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அல் குவைதா இயக்கத்தின், ‘அன்சார் கஸ்வதுல் ஹிந்த்’ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், சுதந்திர தினத்துக்கு முன், தலைநகர் லக்னோ உட்பட மாநிலத்தில் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்ததிட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.