வேளாண் கடன் தள்ளுபடி

கர்நாடகாவில் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கான ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், கொரோனா தொற்றால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றினால் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தின் நிதி சுமையை குறைக்கும் வகையில் இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்துள்ளார்.