கட்டாய கல்வி கட்டணம் நிர்ணயம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தமிழகத்தில் சிறுபான்மையினர் அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்களில் மாணவர்கள் கட்டணம் இன்றி சேர்க்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் சேரும் மாணவர்கள், அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை, கட்டணமின்றி படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை, தமிழக அரசே வழங்கும். அவ்வகையில், வரும் ஆண்டுகளில் கல்வி கட்டணமாக, எல்.கே.ஜி, யு.கே.ஜி, ஒன்றாம் வகுப்புக்கு 12,500, இரண்டாம் வகுப்பு 12,449, 3ம் வகுப்பு 12,579, 4ம் வகுப்பு, 12,585, 5ம் வகுப்பு 12,832, 6ம் வகுப்பு, 17,078, 7ம் வகுப்பு 17,107 மற்றும் 8ம் வகுப்புக்கு 17,028 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசு தரப்பில் கல்வி கட்டணத்தை அப்பள்ளிகளுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.