காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி சட்டசபையில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான சவுத்ரி மத்தீன் அகமது, பாரதத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹிந்துக்களின் சந்ததியினர்தான். இருவரும் ஒரே டி.என்.ஏவையே கொண்டுள்ளனர். இரு சமூகங்களுக்கிடையிலான சண்டைக்கும் பிளவுக்கும் அரசியல் மட்டுமே காரணம்.
எனது முன்னோர்கள் உத்தரபிரதேசம் தோடல்பூர் கிராமத்தில் வாழ்ந்த ஹிந்துக்கள். எனது தாய் ஒரு பிராமணர், தந்தை ரஜபுத்திரர். சுற்றியுள்ள இரண்டு கிராம மக்கள் ஒன்றாக முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அப்போது, எனது குடும்பமும் மாறியது. பாரதத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹிந்து மூதாதையர்கள் உள்ளனர். இதை நம்பாதவர்கள் வரலாற்று புத்தகங்களை படிக்க வேண்டும். இது மறுக்க முடியாத உண்மை’ என்றார்.
முன்னதாக, ஹிந்துக்கள், முஸ்லிம்களின் டி.என்.ஏ ஒன்றுதான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் சமீபத்தில் கூறியிருந்தார் என்பதும், பீகார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜமாகான், தனது மூதாதையர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹிந்து ரஜபுத்திரர்கள் என்றும் பின்னர் முஸ்லிமாக மதம் மாறினர் என்று தெரிவித்திருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.