கோவை, முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள், 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால், அப்பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் அங்கு சென்றுவிட்டனர். அவர்களது ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் 40 ஆண்டுகள் பழமையான ஐந்துக்கு மேற்பட்ட கோயில்களையும் மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை உதவியுடன் இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் கைது செய்தனர். பின்னர், ஜேசிபி எந்திரங்களின் உதவியுடன் கோயில்கள் இடிக்கப்பட்டன. கோயில்கள் இடிக்கப்பட்டபோது, மக்கள் கதறி அழுதனர்.