தி.மு.க ஒன்றியத்தின் அத்துமீறல்

கும்பகோணம் அருகே உள்ள பெரும்பாண்டி பஞ்சாயத்து தலைவரான பாஸ்கர் என்பவர், கும்பகோணம் வடக்குப் பகுதியின் தி.மு.க ஒன்றிய செயலராகவும் உள்ளார். அங்கு, பஞ்சாயத்து அலுவலகம் புதுப்பிக்கப்படுவதை பயன்படுத்தி அவர்,  பஞ்சாயத்து அலுவலகத்தின் முகப்பில் அமைக்கப்பட்ட போர்டிகோ கூரையில், தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தை வரைந்துள்ளார். அரசுக்கு சொந்தமான அலுவலகத்தில் இப்படி தி.மு.கவின் சின்னம் வரையப்பட்டது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி அ.தி.மு.கவினர் கும்பகோணம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.