வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம், ‘தி.மு.க., தேச விரோதத்தை ஊக்குவிக்கிறது. ‘ஒன்றிய அரசு’ என்று தி.மு.கவினர் சொல்லி மக்களை திசை திருப்புகின்றனர். ‘ஜெய்ஹிந்த்’ என்ற தேசத்தின் தாரக மந்திரத்தை இழிவுப்படுத்தி வருகின்றனர். இதனை, பா.ஜ.க தொடர்ந்து கவனித்து வருகிறது. வெற்றி பெற்றால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு, 5 ரூபாய் குறைப்போம் என, தி.மு.க கூறியது. ஆனால், அப்படி குறைக்காமல், மாநில அரசு வரியை உயர்த்தி விட்டு, மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துதுகிறது. இதனை, வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.கவை பொறுத்தவரை ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே சட்டம் என்று, அனைவரும் பாரத தாயின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்றுதான் கருதுகிறது’ என கூறினார்