ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்து 2020ல் ஐந்து மாதங்களுக்கும் மேலாக 36 மத்திய அமைச்சர்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்தனர். பல பகுதிகளுக்கு சென்று, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட உள்ள நன்மைகள், வளர்ச்சி குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தனர். இம்முயற்சி நல்ல பலன் அளித்துள்ளது. இதனையடுத்து, வரும் சுதந்திர தினத்துக்கு பிறகு, வாரந்தோறும் நான்கு மத்திய அமைச்சர்களை ஜம்மு – காஷ்மீருக்கு செல்வார்கள். தொலை துாரப் பகுதிகளுக்கு சென்று, மக்களை சந்தித்து அவர்களின் குறை தீர்க்கும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.