சுராஜ் இந்திய அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக 64 பொதுநல மனுக்களை செய்தது. இதற்கு கடந்த 2017ல் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ரூ. 25 லட்சம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2020ல் அந்த அமைப்பின் அசையும் அசைய சொத்து விவரங்களை நீதிமன்றம் கோரியது. ஆனால் அதற்கு அந்த அமைப்பு பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, அதன் தலைவர் ராஜீவ் தியாவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அபராத வசூலை தடுப்பது, நேரத்தை வீணடிப்பது என தொடர்ந்து செயல்பட்டு நீதிமன்ற அவமதிப்பு செய்த அவரை ஏன் தண்டிக்ககூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.