அசாமில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஐக்கிய மக்கள் புரட்சிகர முன்னணி என்ற அசாமைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைமைத் தளபதி மங்கின் கல்ஹாவ், அந்த அமைப்பினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். முன்னதாக, அதன் தளபதி மார்ட்டின் கைட் கடந்த அக்டோபரில் சிங்காசன் மலையில், என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனால், அந்த அமைப்பு சரணடைய முடிவு செய்தது. அது குறித்து அப்போதைய அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவாலுக்கு அவ்வமைப்பினர் கடிதம் எழுதியிருந்தனர் ஆனால் சரணடையவில்லை என்பதும் சீனா இந்த பயங்கரவாத கும்பலுக்கு துப்பாக்கி உள்ளிட்டவற்றை வழங்கி ஊக்குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவனது கும்பல் மரங்களை வெட்டி கடத்தி வந்ததால் அசாமின் வீரப்பன் எனவும் இவன் காவல்துறையால் அழைக்கப்பட்டான்.