பா.ஜ.கவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாவர்சந்த் கெலாட், கர்நாடக மாநிலத்தின் 19வது கவர்னராக பதவியேற்றார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் எடியூரப்பா, முன்னாள் கவர்னர் வஜுபாய் வாலா, சபாநாயகர், தலைமைச் செயலர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.