உத்தரபிரதேசம், பிரதாப்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள 8ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு பண்டைய கால சூரியநார் கோயில் சிதிலமடைந்த நிலையில் கடந்த 2011ல் அக்கிராம மக்கள் கண்டறிந்து அரசுக்கு தெரிவித்தனர். அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஆனால், பிறகு அது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. இதனால், அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து ‘பைஹரன் நாத் தாம் க்ஷேத்ரிய விகாஸ் சன்ஸ்தான்’ என்ற அமைப்பை உருவாக்கி சிதிலமடைந்த அக்கோயிலை பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது. அந்த ஆலயத்தை புதுப்பிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள் அக்கோயிலை பார்வையிட்டனர். பிறகு, இதனை விரைவில் மறு உருவாக்கம் செய்து, மக்கள் வந்து செல்லும் வகையில் புனித யாத்திரை தலமாக மாற்ற உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.