விஷ்வ ஹிந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு சார்பாக கிராம கோவில் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை, ஓய்வூதியம், பூசாரிகள் நல வாரியம், பூசாரிகளுக்கு இலவச வீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் வி.ஹெச்.பி கோட்ட பொறுப்பாளர், பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர், உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.